Monday, November 22, 2010

ஒரு மாலைப் பொழுதில்...

இது கொஞ்சம் பேச சங்கடமான விஷயம்தான்.ஆனால் அந்தப் பெண்மணியின் பரிதாபமான முகம் பேசவைக்கிறது.
மாலையில் என்னோடு நடைப்பயணம் அதான் வாக்கிங் வருபவர்.ஒரு பிரபலமானவரின் மனைவி,பெயர் வெண்டாமே பாவம்...இனி அவர் வார்த்தைகளிலேயே...
``இவரும் நானும் ஒன்றாக வளர்ந்தவர்கள்.என் அத்தைப் பையன்தான்.சின்ன வயசிலேந்தே இவந்தான் உன் புருஷன் அப்படிம்பாங்க.சரின்னுட்டேன்.அவருக்கும் அப்படித்தான்.கல்யாணம் ,குழந்தை எல்லாம் நடக்கத்தான் நடந்தது.என்னன்னா அவருக்கும் எனக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம்.இது அப்போல்லாம் தெரியலை.இப்போ எனக்கு அறுபது.எல்லாம் ஆஞ்சு ஓஞ்சு அக்கடான்னு கிடக்கமாட்டமான்னு இருக்கேன். ஆனா அவருக்கு இப்பதான் என்ஞாய் பண்ண நேரம் கிடைச்சிருக்கு.வயசு காலத்துலே ஆபீஸ் வேலையா ஓடிக்கிட்டே இருப்பார்.பலநாட்கள் வெளியூர் கேம்ப்தான்.நான் குழந்தைகளோடு கெடப்பேன்.
இப்போ எல்லாம் முடிஞ்சு போச்சு.ரிடையர்டு லைஃப்தானே...ஆனா நாந்தான் இப்போ மாட்டிக்கிட்டேன்.எனக்கு அவரோட ஜாலி லைஃப்லே ஈடு கொடுக்க முடியல.இந்த வயசுலே எந்திரன் பார்த்து கைதட்ட என்னால் முடியல. இந்த மாதிரி நிறைய விஷயங்கள்.வீட்டுக்குள்ளே எப்பவும் ஒரு மோனயுத்தம்தான்.வெளிநாட்லே இருக்கிற பசங்களுக்கு இதெல்லாம் தெரியாது.நாங்க சந்தோஷமா இருக்கிறதாதான் நினைச்சிகிட்டு இருக்காங்க.அது சரி இதையெல்லாம் புள்ளைங்ககிட்ட பேசமுடியுமா?``
சரி,அவர் என்ன சொல்ல வர்றார்? அவரே சொல்றார், கேளுங்க...
``இது எல்லாத்துக்கும் காரணமா நான் நினைக்கிறது எங்களுக்குள்ள வயசு வித்யாசம் இல்லை என்பதுதான்.பெண் சீக்கிரம் ஓய்ஞ்சு போய்டறா.ஆனா ஆணுக்கு வயசு ஆகஆகத்தான் எல்லா ஆசையும் ஏறுது.என் கணவரை நான் தப்பு சொல்லமாட்டேன்.பாவம் அவர் என்ன செய்வார்?இயற்கை அந்த மாதிரி படைச்சிருக்கு.
நான் நினைப்பேன்,இதனாலதான் பெரிய மனுஷங்கள்ளாம் `சின்ன வீடு` வெச்சுக்கறாங்க போலருக்கு.அந்த பொண்ணு வயசு கொறச்சலாத்தானே இருக்கும்?அப்ப `பெரியவீடு` நிம்மதியா இருக்கலாம்.``
நாங்க ரெண்டுபேரும் சிரிச்சுட்டோம்.சரி,வேறு என்ன பண்ண? அவர் தொடர்ந்தார்...
``ஆனா நம்பள மாதிரி இருக்கிற மிடில் க்லாஸ்ஃபேமிலி எல்லாம் என்ன பண்ண முடியும்?அப்படியே நாட்களை ஓட்ட வேண்டியதுதான்.
எதுக்கு சொல்ல வர்றேன்னா இந்த காலத்து பொண்டுக வர்ற மாப்பிள்ளை பையனுக்கு அதிக வயசு வித்யாசம் இருக்கக்கூடாதுன்னு சொல்லுதுங்க.அதுங்ககிட்ட எப்படி இதை சொல்றது?அந்த காலத்துல பத்து வயசு வித்தியாசத்துல பண்ணாங்க.என்னைக் கேட்டா அதுதான் கரெக்டுன்னு சொல்வேன்.நீங்க இத பத்தி எழுதுங்களேன்...`` என்றார்.
இதோ எழுதிவிட்டேன்.நீங்க என்ன சொல்றீங்க?...

4 comments:

 1. engal veettil ulta..appavirku 64..ammavirku 53...ammavirku pudhiya padangal parthuvidavendum...mall poga vendum..restaurant poga vendum...velioor poga vendum..appaval andha alavu mudiyavillai..irandu perum ore vayadhil irundhal endha prachanai varadhu :-)ennoda parvaiyil ilaya vayadhil manaivirku kanavan vendum..vayadhana kalathil kanavanirku manaivi vendum..aangal dhan oindhu pogirargal..avargalin pazhakangal(lifestyle) appadi..nan idhu varai oru pennirku narpadhu vayadhi "heart attack" vandhadhaga kelvipattadhillai...niraya aangalukku varudhu..my 2 cents aunty. Barani

  ReplyDelete
 2. இதற்கு வயதை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. பிரும்மச்சார்யம், கிருஹஸ்தாச்ரமம், வானப்பிரஸ்தம், சன்யாசம், என்று நான்கு படிகள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. வானப்பிரஸ்த நிலையில் ஆண்கள் கிருஹச்தாஸ்ரமத்தில் இருந்து வெளியில் வராமல் இருப்பதுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.
  http://vidyasubramaniam,blogspot.com

  ReplyDelete
 3. எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா இதற்க்கு எல்லாமே நமது குடும்ப வாழ்க்கை முறை மாறிவிட்டது தான். சுற்றி எல்லோரும் இருந்தால் நமக்கு வேறு எதிலுமே கவனம் செல்லாது.

  ReplyDelete
 4. En peyar karthi, vayathu 26. En manaiviku 19. Love marrage, pagalla office night veeduku poven adutha sila nimishangalla sanda vanthuruthu. Enaku Ava aluthalo kavalaiya irunthalo pidikathu, maximum engalukulla sandai varathuku kaaraname enga somperi thanamthan, aana therinchum sila samayankella iruvarukum kobam vanthu aaluku oru moolaila paduthu thoonkiruvom. Engalathu koodu kudumpam. Amma abba thampi naan manaivi 1vayathu kuzhanthai. Naanga podukura sandaikal kuzhanthai thanams irukunu ammavum abbavum enga vishiyathula thalayidurathe illa , appadiya kedalum Ava sinna ponnu nithan anusarichi poganumnu solliranga, Ava kooda pesama iruka mudiyala ipdi pesama irukuratha vida sethuralamnu thonuthu.. Aana avala enaku rompa pidikum, Ava kooda peshuna adutha nodiye sanda vanthuruthu, vara sandailum surupulla thanama iruku, aana athukaha Ava rombe feel pandara alukura enaku Ava alukurathu pidikala, enna pandrathunu theriyala . Yaaravathu udhavi pannunga please

  ReplyDelete