Friday, December 10, 2010

`அறிவே` இல்லை மூளைக்கு!

தலைப்பு வேடிக்கையா இருக்கு இல்லே?ஒரு சில சமயங்களில் மூளை அப்படித்தான் நடந்து கொள்கிறது! ஒரு நிகழ்ச்சி எப்பவோ நடந்தது என்று வைத்துக்கொள்வோம்,அதைப்பற்றி நினைக்கிறோம்,அந்த சமயத்தில் நமக்கு என்ன உணர்வு இருந்ததோ அதே உணர்வு மீண்டும் ஏற்படுகிறது.யாரோ ஒருவர் ந்ம்மை அவமதித்திருப்பார்,மனம் வேதனையில் தத்தளித்திருக்கும்...இவரா,இவரா இப்படி என்று மனதில் வேதனை பிடுங்கித் தின்னும்.வயிற்றில் சங்கடம் புரட்டும்...அமிலங்கள் சுரக்கும்...
இந்த நிகழ்ச்சியை ஒரு வருடம் கழித்து நினைத்துப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்...நீங்கள் எத்தனை தீவிரமாக அதைப்பற்றி நினைக்கிறீர்களோ அந்த அளவிற்கு பழைய நாளில் என்ன உணர்வுகள் ஏற்பட்டதோ அதே உணர்வுகள்,வயிற்றுச்சங்கடம்...புரட்டல்...அதே,அதே...
மூளைக்குத் தெரியாது இப்போது உண்மையில் அந்த சம்பவம் நடக்கவில்லை என்று! மனம் அந்தமாதிரி நினைக்கவும் அதற்கேற்றார் போல ஹார்மோன்களைச் சுரக்கிறது...நம் மனம் என்ன சொல்கிறதோ அதை சிம்பிளாக செய்துவிடுகிறது மூளை! அதனால்தான் சொன்னேன்,அறிவே இல்லாத மூளை என்று.
ஒரு திரைப்படத்தில் ரேவதி சொல்வார்,``அவர்கள் ஒரு முறைதான் கற்பழித்தார்கள்.ஆனால் பத்திரிக்கைகாரர்களும்,இந்த கோர்ட்டிலும் அதைப்பற்றிப் பேசிப்பேசியே தினம்தினம் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள்`` என்று.
அது போலத்தான் நமக்கு அவமானங்களும்,துரோகங்களும் ஒரு முறைதான் ந்டைபெறுகிறது.ஆனால் நம் மனதால் அதை மீண்டும் மீண்டும் நினைக்கும்போது மூளை அதே ஹார்மோன்களைச் சுரக்க,சுரக்க நம் உடம்புதான் பாழாகிறது.
மறக்கமுடியவில்லையே என்கிறீர்களா,அதனால் நாம்தான் நமக்கு துரோகம் செய்துகொள்கிறோம்.அவர்கள் ஒருமுறைதான் செய்தார்கள்!ஆனால் நாம் மீண்டும்,மீண்டும் நமக்குச் செய்து கொள்வதால் உடம்புவலி,தலைவலி எல்லாம் வருவதை உணரலாம்...டெஸ்ட்டுக்கு வேண்டுமானால் ஒன்றை நினைத்துப்பாருங்கள்,நம் மூளைக்கு எத்தனை அறிவில்லை என்பது அப்போது புரியும்.
இதையே பாஸிட்டிவாக மாற்றலாம்.ஒரு நல்ல ஜோக்,நல்லநிகழ்ச்சி இப்படி நினைத்துப் பாருங்களேன்,அப்பவும் மூளை அதேமாதிரி நல்ல ஹார்மோன்களை சுரக்கும்...அதற்கு ஒன்றும் தெரியாது,மனம் சொல்லும்படி ஆடும் குரங்கு அது!

1 comment:

  1. மிகவும் நன்றாக இருக்கிறது. உங்களுடைய தனித்தன்மையான, உங்களுக்கே உரித்தான ”சில வார்த்தைகளை” இங்கே மீண்டும் படிக்க முடிவது மிகவும் மகிழ்ச்சி.

    இன்றுதான் “சினேகிதி”யில் இந்த ப்ளாக் பற்றி நீங்கள் சொல்லியிருந்தது பார்த்து, இங்கு வந்து படித்தேன்.

    நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள்.

    மனம் நிறைந்த நன்றி

    அன்புடன்

    சீதாலஷ்மி

    ReplyDelete