Monday, January 31, 2011

இப்படியும் ஒரு மனவலிமை...!

ஒரு ஊர்ல ஒரு ஸ்கூல் பொண்ணு...நகரம் இல்ல,கிராமம்தேன்...+1-ஆம்...ஏதோ வயத்துவலி,வயத்துவலின்னு அடிக்கடி சொல்லிட்டு இருந்திருக்கா...ஒருநாள் ஸ்கூல்ல ரொம்ப வலி ஜாஸ்தி ஆகிடவும்,பக்கத்துல இருந்த ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க...அங்க பாத்ரூம்க்குப் போன புள்ள ஒரு புள்ளய பெத்துட்டு கத்தியிருக்கா...!ஏதோ சத்தம் கேக்குதேன்னு போய்ப் பாத்தவங்க அரண்டுபோய் இருக்காங்க...
மறுநாள் இது தொடர்பா இன்னொரு செய்தி...அந்த புள்ள குழந்தையோட `போஸ்` கொடுக்க ,பக்கத்துல ஒரு விடல பையன் நின்னுக்கிட்டு ``நான் இவளை கைவிடமாட்டேன்.கல்யாணம் பண்ணிப்பேன்`` அப்படீன்னு பேட்டி கொடுக்கறான்...!
இதுல கலாசாரம் ,பண்பாடு அப்படிங்கற அயிட்டமெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்...அந்தப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்வரை வீடு,பள்ளி என எல்லா இடங்களிலும் தன் கர்ப்பத்தை,அது சார்ந்த சிரமங்களை மறைத்திருக்கிறாள் என்றால் அவளுக்கு என்ன மனவலிமை இருக்க வேண்டும் என்றுதான் ஆச்சர்யமாக இருக்கிறது...
நாம் நினைத்தால் எந்த அளவிற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளமுடியும் என்பதற்கு இதுவே (சிறந்த உதாரணம் என்று சொல்லமாட்டேன்,கெட்ட )உதாரணம் எனலாம்.
ஏனென்றால் முதல் தாய்மை,முதல் பிரசவம் என்பதெல்லாம் உற்றம்,சுற்றம் இருந்தாலும்கூட பெண்களை பெரிய அளவில் பயமுறுத்தும்,குழப்பத்தில் ஆழ்த்தும்.ஆனால் இந்தப்பெண் கடைசிவரை யாருக்கும் தெரியாமல் மறைத்திருக்கிறாள்!
இதையே ஏன் நாம் நல்லவிதத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது?மனதில் தீர்மானம் செய்துகொண்டால் எதையும் சாதிக்கமுடியும்!
சாதிக்க நல்ல விஷயங்களை நினைப்போம்...!

4 comments:

  1. அப்பெண் மறைத்து சாதித்தது என்பது இரண்டாவது. ஆனால், கர்ப்பம் தரித்த பெண்ணிடம் மூன்று நான்கு மாதங்களில் வெளியில் தெரியும் உடல்ரீதியான மாற்றம் எப்படி எவருக்குமே தெரியாமல் போனது..? நம்பும்படியாகவா இருக்கிறது மேடம்? நான் தவறாகக் கூறவில்லை. இதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி?

    ReplyDelete
  2. Dear Madam, Why haven't u replied me for the previous comment in the previous posting-rathiloganathan

    ReplyDelete
  3. நானும் இந்த செய்திய பார்த்து அதிர்ச்சி, கோபம் எல்லாம் அடைந்தேன். அது எப்படி இவ்வளவு சின்ன வயதில் அப்பா அம்மாவிற்கு தெரியாமல் இப்படி ஒரு காரியம் செய்ய ஒரு பெண்ணாலோ அல்லது ஆணாலோ முடிகிறது? முதலில் நன்கு படித்து நல்ல வேலையில் இருந்த பிறகு காதல் செய்வதோ கல்யாணம் செய்து கொள்வதோ தவறே இல்லை.
    இன்னும் என்னால் ஜீரணிக்கமுடியாத விஷயம் அந்த பெண்ணின் அம்மாவிற்கு இது எப்படி கடைசி வரை தெரியாமல் போயிற்று?

    ReplyDelete