Friday, February 22, 2013

ஏ.ஸி.பெட்டி...

பகல்நேர ரெயில் பிராயணங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.சென்றமுறை கோவையில் லேத்துப்பட்டறை வைத்திருக்கும் ஒரு பெண்மணி பேசிக்கொண்டுவந்தார்.மின்தடை பற்றிப் பேச்சு வந்தபோது,”அதுக்காக என்ன பண்றதுங்க?சமாளிக்க வேண்டியதுதான்...’’என சாதாரணமாக பேசினார்.

நேற்றைய பிராயணத்தில் bsnl-ல் வேலை பார்ப்பவர்.நேர்மையாக ஒத்துக்கொண்டார்.”இங்க பார்க்கற வேலைக்கு சம்பளம் அதிகம்தான்.எனக்கு பஸ் ட்ரைவருங்களை பார்க்கும்போதுதான் வருத்தமாக இருக்கும்.அவங்களுக்கு சம்பளம் கம்மிங்க...”என்றார்.

அவர் பேசினதில் என்னை யோசிக்க வைத்த விஷயம்...”இந்த ஏ.ஸி.பெட்டில வர்ற மனுஷங்கள்ட்ட ஒரு உயிரோட்டமே இருக்காதுங்க.கம்யூட்டர்,பேப்பர்,இல்லைன்னா தூக்கம்.ஒருத்தொருக்கொருத்தர் பேசிக்கவே மாட்டாங்க.இதுவே சாதா பெட்டியிலே ,பக்கத்துல கலகலன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க.வேர்க்கடலை விற்கறவ்ங்க,புக் விக்கறவங்கன்னு ஒரே சத்தம்... முகத்தல அடிக்கற காத்துன்னு உயிர்த்துடிப்போட இருக்கும்” என்றார்.

என்ன பண்ணுவது?அந்த `செத்து’ப்போன பெட்டியில்தான் தொடர்ந்து பயணித்தோம்...

1 comment:

  1. வாழ்த்துக்கள்.அன்று தொட்டே நீங்கள் மங்கையர்மலர் ஆசிரியராக இருந்த பொழுதில் இருந்தே உங்கள் எழுத்துக்களுக்கு தீவிர ரசிகை.இப்பொழுது நீங்களும் வவலைப்பூவில் எழுதுவதை அறிந்ததும் இந்த பின்னூட்டம்.மகிழ்வாக உள்ளது.வலைப்பூவில் தொடர்ந்து உங்கள் எழுத்துக்களைக்காண ஆவல்.மங்கையர் மலரின் உஙகளால் சில முறை பரிசுகள் பெற்றுள்ளேன்.பல முறை என் எழுத்துக்கள் வெளிவந்துள்ளன.இப்பொழுது வலைப்புவிலும் எழுதுகிறேன்.

    http://shadiqah.blogspot.in/

    ReplyDelete